‘தேர்தலும் இல்லை, பணமும் இல்லை’ : ஜனாதிபதி

Date:

தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது தேர்தலை நடத்துவதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை, எங்களுக்குத் தெரிந்தவரை  தேர்தல் திகதி இன்னும் பெயரிடப்படவில்லை.

அதிகாரப்பூர்வமாக தேர்தல் திகதி எதுவும் இல்லை. சிலர் மார்ச் 9 கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்தவரை, அதை வைத்து எந்த சட்ட முடிவும் எடுக்க முடியாது.

தேர்தலுக்கான நிதி இல்லையென கடந்த டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்தேன்.

இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வாக்களிப்புக்கு செல்வதாக எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

உறுப்பினர் எண்ணிக்கையை 5,000 ஆக குறைக்க தேர்தல் ஆணையத்திடம் கூறினேன். தற்போது தேர்தலும் இல்லை. தேர்தலுக்கு பணமும் இல்லை. பணம் இருந்தாலும் வாக்குகள் இல்லை. அதனால் என்ன செய்வது?  என குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இவ்வாறு செய்கிறீர்கள், மக்களுக்கு பிரச்சினையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்குவதுதான் உங்களுக்கு பிரச்சினையா? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...