புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில் இடைக்கிடையே பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றானது தென்மேற்கு திசை நோக்கி வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 30 -40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இன்றும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாறை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
