எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இடையூறு விளைவித்ததாக இதுவரை 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயங்கள் தெரியவந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதன்போது சில இடையூறுகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செய்ததாகவும், மற்றைய இடையூறுகளை கட்சிகளின் பிரதிநிதிகளின் வழிகாட்டுதலின் பேரில் வேறு வேறு குழுக்கள் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார்.