தேர்தலை சீர்குலைக்கும் குற்றச்செயல்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு கவனம்!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இடையூறு விளைவித்ததாக இதுவரை 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயங்கள் தெரியவந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்போது சில இடையூறுகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செய்ததாகவும், மற்றைய இடையூறுகளை கட்சிகளின் பிரதிநிதிகளின் வழிகாட்டுதலின் பேரில் வேறு வேறு குழுக்கள் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...