தேர்தல் அலுவலகம் வழமைக்குத் திரும்பியது. தற்போதைக்கு தேர்தல் இல்லை

Date:

தபால் மூல வாக்களிப்பு காலவரையின்றி ஒத்திவைக்க தேர்தல் ஆணையாளர் நாயகம் அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்ட துணை மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் நிர்வாக பணிகள் தொடர்பிலான தொடர் அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களுக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பிரதான அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

தற்போது பணியில் உள்ள தற்காலிக உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவைகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அலுவலக நேரத்திற்குப் பிறகு தற்காலிகமாக நிறுத்தப்படும்.

அதேவேளை ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தற்காலிகமாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும்  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த அலுவலகத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் அறிவுறுத்தல் வழங்கப்படுமெனவும் அதுவரை பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் குறித்தகடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...