பயாஸா பாஸில் எழுதிய ‘என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சூம் காணொளி ஊடாக இடம்பெறவுள்ளது.
இந்த நூல்வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரிஇ மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்இகலந்துகொள்ளவுள்ளார்.
கெளரவ அதிதிகளாக வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கவிஞர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் மற்றும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட் ஆகியோர் கலந்துகொள்வர்.
மேலும், சிறப்பு அதிதிகளாக அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் (கபூரி) (பஹன மீடியா பிரைவட் லிமிடெட்) அவர்களும் ‘நியூஸ் நவ்’ ஆசிரியரும் மீள்பார்வை பத்திரிகை முன்னாள் ஆசிரியருமான பியாஸ் மொஹமட், மற்றும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அஹமட் முனவ்வர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.