பல்கேரியாவில் 18 அகதிகள் சடலமாக மீட்பு: 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில்!

Date:

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர்.

குறிப்பாக, துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து வருகின்றனர். இதனை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த கண்டெய்னர் லொரி ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்று கொண்டிருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றது.

இதையடுத்து, தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்றுகொண்டிருந்த அந்த கண்டெய்னர் லொரியை திறந்து பார்த்தனர். அப்போது, கண்டெயினரில் 52 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதில், 18 பேர் பிணமாக கிடந்தனர். குழந்தைகள் உட்பட எஞ்சிய 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டெய்னரில் இருந்தவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் என்றும் அகதிகள் அனைவரும் துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயற்சித்தது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அகதிகளை துருக்கி வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய யூனியனுக்குள் கொண்டு செல்ல முயற்சித்தது தொடர்பாக 4 பேரை பல்கேரியா பொலிஸார் கைது செய்தனர்.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...