புதிய நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டங்களை பிற்போடுமாறு அறிவுறுத்தல்!

Date:

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்  நடைபெறவுள்ளதனால் அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் சாவியாக்களில் நடைபெறவுள்ள புதிய நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டங்களை பிற்போடுமாறு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கமைய இந்த பொதுக்கூட்டங்களை (சாதாரண தெரிவு/ இரகசிய வாக்கெடுப்பு) உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் EDR/LB/2023-767 இலக்க மற்றும் 2023.02.06ம் திகதிய கடிதத்தின் பிரகாரம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் நம்பிக்கையாளர் தெரிவுகளை நடாத்துவதினை தவிர்ந்து கொள்வதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் நம்பிக்கையாளர் தெரிவுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...