புத்தல மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் நிலநடுக்கம் இன்று முற்பகல் 11.44 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
3.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 7-8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நிலஅதிர்வு குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.