புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

Date:

புற்று நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளை வாங்குவதற்கான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மார்பக புற்றுநோய் மற்றும் தைராய்ட் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...