பெப்ரவரியில் 54,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

Date:

பெப்ரவரி மாதத்தில் இதுவரை 54,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெப்ரவரி முதல் வாரத்தில் 54,685 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன் ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் பெப்ரவரியில் இதுவரை மொத்தம் 14,145 ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.இந்தியாவில் இருந்து 6,825 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,721 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 3,881 சுற்றுலாப் பயணிகளும், பிரான்சிலிருந்து 3,51சுற்றுலாப்பயணிகளும் இந்த மாதம் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில் மொத்தம் 102,545 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அதிகாரசபை  சுட்டிக்காட்டியுள்ளது.

மார்ச் 2022க்குப் பின்னர், ஒரு மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவாகும். 2022 ஆம் ஆண்டில் இலங்கை மொத்தமாக 719,978 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடி, எதிர்ப்புகள் மற்றும் வெளிப்புற காரணிகளால், கடந்தாண்டு ஏப்ரல் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது.

இருப்பினும், புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த காலாண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்தது.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...