புத்தளம் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைப்பு!

Date:

புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு 1,40,000 பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய, புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி மன்ற செயலாளரும், முன்னாள் நகர சபையின் நிர்வாக அதிகாரியுமான சமூக ஆர்வலர் எச்.எம்.எம் சபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய அகில இலங்கை Y.M.M.A அமைப்பின்  புத்தளம் மாவட்டப் பணிப்பாளரும் சமூக ஆர்வலருமான முஜாஹித் நிசார் தலைமையில் இந்த மருந்துப் பொருட்கள் வைத்தியசாலையின் பிரதான மருந்தாளர் திருமதி மஜிதாவிடம் கையளிக்கப்பட்டன.

மேற்படி இந்த நன்கொடை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பின்  பூரண அனுசரணையுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்சவையும் பதில் செயலாளராக கீர்த்தி...

ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும்...

600,000 மாணவர்கள் காலை சாப்பாடு இன்றி பாடசாலைக்கு வருகின்றார்கள்!

600,000 பாடசாலை மாணவர்கள் காலை சாப்பாடு இன்றி பாடசாலைக்கு வருவதாக பாட்டலி...

சடுதியாக அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்: சிறுவர்களும் அதிகளவில் பாதிப்பு

நாட்டில் தொழு நோயாளர்கள் தொகை அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், இந்த...