மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகளை திருடி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Date:

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பாக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய நேற்று இரண்டு விசாரணைக் குழுக்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.

சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மஹரகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி நேற்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வைத்தியசாலைக்கு நன்கொடையாளரால் வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்தை வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் 21,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்தபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று  கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் குறித்த ஊழியரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஒரு தொகை தடுப்பூசியும், ரூ. 4,25,290 பணமும் கைப்பற்றப்பட்டது.

Popular

More like this
Related

பிரபல இஸ்லாமிய அறிஞரும் சிந்தனையாளருமான கலாநிதி அப்துல்கரீம் பக்கார் அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு.

சமகால இஸ்லாமிய உலகின் சிந்தனையாளர்களில் ஒருவரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி அப்துல்கரீம்...

வடமத்திய மாகாண பாடசாலை அதிபர்களுக்கான தேசிய ஷூரா சபையின் திறன் விருத்தி நிகழ்ச்சி

வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சியை தேசிய ஷூரா  செப்டம்பர் 30 ஆம் திகதி அனுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் நடாத்தியது. கல்வி அமைச்சின் புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய விடயங்களை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பாடசாலை நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். பாடசாலை...

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக ஈட்டப்பட்ட 44.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை...

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...