மருந்து, உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சைகள் தாமதம்: சுகாதார அமைச்சகம்

Date:

மருந்துகள் மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக அவசர சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும், அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துமாறும்  என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்,

நிலைமையை பரிசீலித்து, சில சத்திரசிகிச்சைகள் சிறிது காலம் தாமதமாகுமா என்று பார்க்குமாறு மருத்துவமனை துறைக்கு அமைச்சகம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பேச்சாளர் சம்மில் விஜேசிங்க, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, ஆனால் ஒரு சமூக நடைமுறையாக, அனைத்து அவசர சத்திரசிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து வைத்தியசாலைகளும் புற்றுநோய் சத்திரசிகிச்சை, சிசேரியன் பிரசவங்கள் மற்றும் இருதய சத்திரசிகிச்சைகள் போன்ற அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதாகவும், அவை தொடரும் எனவும் டாக்டர் விஜேசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...