மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பை விரைவுபடுத்த ஆலோசனை!

Date:

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எண்ணெய் கூட்டுத்தாபனமும், இலங்கை மின்சார சபையும் புதிய முறையின் கீழ் இலாபம் ஈட்டுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், உத்தேச மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், நடைமுறைகளை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், மறுசீரமைப்பு பணிகளும் தாமதமானது.

மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை பல பகுதிகளாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தச் செயற்பாட்டின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது, மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், புதிய நிறுவனங்களுக்கு புதிய செயல்முறை மூலம் எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...