மீடியா போரத்தின் 73ஆவது ஊடக கருத்தரங்கு ஹெம்மாதகம அல்-அஸ்ஹரில்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று (19) ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி (தேசிய பாடசாலையில்) நடைபெறவுள்ளது.

ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் இக்கருத்தரங்கு இரு அம்சங்களாக இடம்பெறவுள்ளது.

பாடசாலைகளின் ஊடகக்கழக அங்கத்தவர்கள் , பொறுப்பாளர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கான ஒரு கருத்தரங்கும் அல் அஸ்ஹர் உட்பட பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான ஊடகக் கருத்தரங்கொன்றும் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி திருமதி புர்கான் பீ இப்திகார் மற்றும் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சி.எம்.நவாஸ் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இக்கருத்தரங்கு நடைபெறும்.

இக்கருத்தரங்கில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டாளரும் நவமணி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன், மீடியா போரத்தின் பொதுச் செயலாளரும் ஊடாக பயிற்றுவிப்பாளருமான சிஹார் அனீஸ், சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான தாஹா முஸம்மில், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம் . பி. எம் பைரூஸ், போரத்தின் நிறைவேற்று குழு உறுப்பினரான ஊடகவியலாளர் சாமிலா ஷரீப், உப தலைவர் எம். ஏ. எம். நிலாம், உதவி பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினரான அஷ்ரப் ஏ ஸமத் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, கருத்தரங்கின் இறுதியில் மாலை இடம்பெறும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார் என கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஆதில் அலி சப்ரி தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் கேகாலை மாவட்ட மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கலந்துரையாடலும் இந்த நிகழ்வின்போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...