மே 9 வன்முறை: சவேந்திர சில்வா சரியாக கடமையை செய்யவில்லை- கர்ணகொட அறிக்கை

Date:

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத் தளத்திற்குள் நுழைந்த பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க முப்படைகளின் பாதுகாப்புப் பிரதானி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரணைச் சபை தெரிவித்துள்ளது

அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பல்வேறு நபர்களினால் பிரதிவாதிகளுக்கு எதிராக உரிய விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர் பந்துல குணவர்தன, கோகில குணவர்தன, காமினி லொக்குகே உள்ளிட்ட 39 பேர் தாக்கல் செய்த மனுவை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.

மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் அரசியல்வாதிகள் மற்றும் ஏனையோரின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை பாதுகாப்புத் துறையின் கவனயீனத்தால் இடம்பெற்றதா என்பதை ஆராய்ந்து அறிக்கையிட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட தலைமையிலான மூவரடங்கிய குழு பாதுகாப்புப் படையினர் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரை அறிக்கையின் நகல் நேற்று (24ஆம் திகதி) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளின் பயிற்றப்பட்ட பாதுகாப்புப் படையினரை வரவழைத்து இவ்வாறான தாக்குதல்களை தடுப்பதற்கு பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் முப்படைகளின் இராணுவத் தளபதியாகவும் கடமையாற்றிய சவேந்திர சில்வா போதுமான பங்களிப்பை வழங்கவில்லை.

எனவே, அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழுவின் அறிக்கையை, வசந்த கர்ணகொட சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித ஒலஹேவா நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ்த சில்வா, தமது கட்சிக்காரர் சார்பாக எழுத்துமூலமான ஆட்சேபனைகளையல்ல, எழுத்துமூலமான அறிக்கைகளை நீதிமன்றில் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ருக்ஷான் சேனாதீரவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆஜராகியிருந்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...