யாழில் பூரண ஹர்த்தால்: பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி!

Date:

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடி கம்பத்திலும், பல்கலை கழக சூழலிலும்  கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றது.

இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றது.

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...