விமான நிலையத்தின் சரக்கு முனையம் ஊடாக சீனாவுக்கு பறந்த கோட்டா!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா நோக்கி புறப்பட்டனர்.

அவர்கள்  மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்று அங்கிருந்து சீனாவுக்குப் புறப்படுவார்கள் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய இன்று நள்ளிரவு 12.25 மணியளவில் மலேசியன் ஏர்லைன்ஸின் MH-178 விமானத்தில் கோட்டாபயவும் அவரது மனைவியும் மலேசியாவிற்கு புறப்பட்டனர்.

ஆனால் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற, விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தை பயன்படுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.முன்னாள் ஜனாதிபதியொருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் அறை (V.I.P. Lounge) ஊடாகப் பணம் செலுத்தியோ அல்லது சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாகவோ செல்வதற்கு வசதிகள் காணப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் சரக்கு முனையத்தை பயன்படுத்தி சென்றுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...