’13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளிடமிருந்து ஆலோசனைகள் கிடைக்கவில்லை’

Date:

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக 08 ஆம் திகதி நாடாளுமன்றில் விளக்கமளிக்க உத்தேசித்துள்ள ஜனாதிபதி, அதற்கான ஆலோசனைகளை 04 ஆம் திகதிக்குள் வழங்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரியிருந்தார்.

இருப்பினும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தாலும், சில கட்சிகள் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டாலும், அவை எழுத்துப்பூர்வமாக முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்து என்ற ஜனாதிபதியின் யோசனைக்கு ஆதரவாகவோ அல்லது அதற்கு எதிராகவோ எந்தவித முன்மொழிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...