2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி: விசேட வர்த்தக வரி குறைவு!

Date:

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டை இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளது. இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம், குறித்த முட்டை தொகையை இறக்குமதி செய்யவுள்ளது.

முதன்முறையாக இந்தியாவில் இருந்து சுமார் இரண்டு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த முட்டை தொகை இந்தியாவில் இருந்து நாளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சினால் விதிக்கப்பட்ட முட்டை ஒன்றிற்கு 50 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரியை பெப்ரவரி 21ஆம் திகதி முதல் 1 ரூபாவாக குறைத்துள்ளது.

குறித்த வரித் திருத்தம் மூன்று மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...