26வது இலங்கை வக்பு சபை நியமனம்: தலைவராக மொஹிதீன் ஹுசைன்!

Date:

இலங்கை வக்பு சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளடங்கலாக அங்கத்தவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

1982 ஆம் ஆண்டு இலக்கம் 33 மற்றும் 1962 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கம் ஆகியவற்றின் பிரகாரம் திருத்தியமைக்கப்பட்ட 1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க வக்பு சட்டத்தின் பிரிவு 5(1) இன் படி, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள் விபரம்

1. ஜனாப் எம்.எல்.எம்.எச்.எம். மொஹிதீன் ஹுசைன் – தலைவர்
2. ஜனாப் இசட்.ஏ.எம். பைசல் – பணிப்பாளர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
3. பேராசிரியர் பி.சி.பி. ஜஹுபர் – உறுப்பினர்
4. சட்டத்தரணி எம்.ஏ. மதீன் – உறுப்பினர்
5. ஜனாப் எம்.எம்.ஆர்.எம். சபர் – உறுப்பினர்
6. ஜனாப் மாஹில் டூல் – உறுப்பினர்
7. ஜனாப் ஏ.ஏ. நசார் – உறுப்பினர்
8. ஜனாப் எம். றியாஸ் சாலி – உறுப்பினர்.

Popular

More like this
Related

பிரபல இஸ்லாமிய அறிஞரும் சிந்தனையாளருமான கலாநிதி அப்துல்கரீம் பக்கார் அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு.

சமகால இஸ்லாமிய உலகின் சிந்தனையாளர்களில் ஒருவரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி அப்துல்கரீம்...

வடமத்திய மாகாண பாடசாலை அதிபர்களுக்கான தேசிய ஷூரா சபையின் திறன் விருத்தி நிகழ்ச்சி

வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சியை தேசிய ஷூரா  செப்டம்பர் 30 ஆம் திகதி அனுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் நடாத்தியது. கல்வி அமைச்சின் புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய விடயங்களை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பாடசாலை நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். பாடசாலை...

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக ஈட்டப்பட்ட 44.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை...

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...