75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 588 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நாளை விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகமும் சிறைச்சாலைகளின் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இன்று தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றங்களால் புனர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிறைச்சாலைகளில் சிறந்த நடத்தைகளால் நிரூபிக்கப்பட்ட 31 கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று பேச்சாளர் கூறினார்.