6 இலட்சம் மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்!

Date:

6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலைமை காணப்படுவதாக  மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்து மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்துவது 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைகளின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிக மின் கட்டணம் காரணமாக, நுகர்வோர் ஏற்கனவே மின் சாதனங்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளனர். இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் கட்டணம் அதிகமாக உள்ளதால், அன்றாட தேவைக்குச் செலவழிக்க வேண்டிய பணத்தை, அந்த கட்டணத்தை செலுத்தவே செலவிட வேண்டியுள்ளதாக, நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...