Update:- உக்ரைன்-ரஷ்யா போர் : உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை!

Date:

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி போரை தொடங்கியது.

அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் இராணுவம் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது.

இந்த நிலையில் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்யவுள்ளதையொட்டி ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கியது.

அந்த வகையில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்ய படைகள் நேற்று குண்டு மழை பொழிந்தன.

குறிப்பாக லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களில் போர் விமானங்கள் மற்றும் வெடி குண்டு டிரோன்கள் மூலம் ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்தியது.

அதேபோல் தலைநகர் கீவ், நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் ஆகிய நகரங்களில் தாக்குதல்கள் தீவிரமாக இருந்தன.

அங்கு குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பொது உட் கட்டமைப்புகளை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன.

ஜபோரிஜியா நகர சபையின் செயலாளர் அனடோலி குர்டீவ், ஒரு மணி நேரத்தில் நகரம் 17 முறை தாக்கப்பட்டதாக கூறினார்.

போர் தொடங்கியதற்கு பிறகு இது மிகவும் தீவிரமான தாக்குதல்களின் காலகட்டமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...