அடுத்த வாரம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான தீர்மானம்: தேர்தல்கள் ஆணைக்குழு!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் தொடர்பான ஆணைக்குழுவின் தீர்மானம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் வழங்குவதில் உள்ள சிக்கல் தொடர்பில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதி வழங்குவதில் உள்ள சிரமங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் நிதியை ஒதுக்க அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானம் குறித்து திறைசேரி செயலாளர் தேர்தல் ஆணையத்திக்கு அறிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...