இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தும் பாகிஸ்தான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சரின் விஜயம்!

Date:

பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹினா ரப்பானி கர் இன்று (03) முதல் இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச் கூறுகையில், இலங்கையின் 75 வது சுதந்திர தின விழாவில் கெளரவ விருந்தினராக அமைச்சர் பங்கேற்பார்.

சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன், ஹினா ரப்பானி கர் இலங்கைத் தலைமைக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும் மும்தாஸ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களிலும் சீராக வளர்ந்து வரும் வரலாற்று உறவுகளை பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சரின் விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும் இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு பாகிஸ்தானின் ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...