உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்தது!

Date:

மின்சாரக் கட்டண திருத்தத்தின் காரணமாக  உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 10% வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விலை திருத்தம் இன்று (பெப்ரவரி 16) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஏனைய உணவு வகைகளின் விலை திருத்தம் இடம்பெறாது எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் “சிற்றுண்டிச்சாலைகளில் சோலார் பேனல்களை நிறுவும்படி  கேட்டோம்.  இதற்கு முன்  மின் கட்டணத்தை உயர்த்தினாலும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. எரிவாயு அதிகரித்த போதும் நாம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...