ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய உத்தரவு காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு மற்றுமொரு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் அதன் ஆரம்ப வேலைகள் கடன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த 31ம் திகதி அரசு நிறுவனங்கள் கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடாது என்று ஜனாதிபதி புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
அதுமட்டுமின்றி, உரிய உத்தரவை மீறி அது தொடர்பான செலவுகளுக்கு அரசு அதிகாரிகளே தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்று அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்குதல், அச்சடிக்கும் பணிகள் மேற்கொள்வது, அரசு ஊழியர்களின் சேவையைப் பெறுவது போன்ற தேர்தல் ஆணைக்குழு செயல்பாடுகளுக்கு மேலும் ஒரு தடையாக இருப்பதே இந்தப் புதிய உத்தரவுக்குக் காரணம்.
இதுவரை நடந்த ஒவ்வொரு தேர்தலிலும், தேர்தல் ஆணைக்குழு கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்தது.
ஜனாதிபதியின் புதிய உத்தரவு உள்ளுராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டதாக சிலர் சந்தேகிக்கின்றனர்.