துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது!

Date:

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில்  கடந்த 6 ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன.

மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் துருக்கியில் 24,617 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 80 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு...

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...

பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...