துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இலங்கை அமைச்சகத்திற்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும், இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 53 பேரும், சிரியாவில் 42 பேரும் என மொத்தம் 95 பேர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.