‘முஸ்லிம்களை வாழ விடு’:காத்தான்குடியில் பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி சாத்வீகப்போராட்டம்!

Date:

பொலிசார் கையகப்படுத்திய பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி அறவழி சாத்வீகப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) பள்ளிவாசல் முன்றலில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.
புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை பொலிசார் கையகப்படுத்தியதற்கு, எதிர்ப்புத் தெரிவித்தும், பள்ளிவாசலை  மீளப்பெற்றுத்தரக் கோரியும்  இந்த போராட்டம் இடம்பெற்றது.

காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதியில் இருக்கும் தாருல் அதர் பள்ளிவாசல் நீண்ட காலமாக மூடி தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்த இறை இல்லத்தை இலங்கை பொலிஸ் தினைக்களம் அத்துமீறி பொலிஸாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிராந்திய காரியாலயமாக மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.

இதன்போது காத்தான்குடி முழுவதும் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் என்பவற்றை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நன்றி:எம்.பஹ்த் ஜுனைட்

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...