அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று முக்கிய கலந்துரையாடல்

Date:

தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட இன்று கூடவுள்ளது.

மேலும் அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணை மற்றும் ஜனாதிபதியுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் பேச்சு நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்று காலை 08 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுளளது.

இதேவேளை, புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதன் காரணமாக இன்றைய நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த புகையிரத தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் பணிப்புறக்கணிப்பை முடித்துக்கொண்டன. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையை வாபஸ் பெறுதல், மின் கட்டணக் குறைப்பு, வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் நேற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...