ஆங்கிலம் கற்பிக்க 13,800 ஆரம்ப ஆசிரியர்கள்!

Date:

முதலாம் தரப் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கங்கொடவில சமுத்திராதேவி மகளிர் ஆரம்பப் பாடசாலையில் இன்று (30) முதலாம் தரப் பிள்ளைகளுக்கான ஆங்கில மொழிப் பாவனையை ஆரம்பிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதற்குத் தேவையான சுமார் 13,800 ஆரம்ப ஆசிரியர்கள் இதுவரை பயிற்சி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் மாணவர்கள் ஆரம்பம் முதலே ஆங்கிலத்தில் கல்வி கற்பதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொள்ள ஆங்கில மொழி ஊடான கல்வியை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, அடுத்த வருடம் இத்திட்டம் தரம் இரண்டிலிருந்தும் பின்னர் தரம் மூன்றிலிருந்தும் ஆங்கில மொழி மூலமான கல்வி இணைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...