இந்தியாவில் ஒரே நாளில் 1,890 பேருக்கு கொரோனா!

Date:

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு நேற்று முன்தினம் 1,249 ஆக இருந்த நிலையில் நேற்று 1,590 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 437 பேர், குஜராத்தில் 402 பேர், கேரளாவில் 321 பேர், கர்நாடகாவில் 155 பேர், டெல்லியில் 139 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 63 ஆயிரத்து 883 பேர் நலம் பெற்றுள்ளனர். இதில் நேற்று 1,051 பேர் அடங்குவர்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 9,433 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 832 அதிகமாகும்.
கொரோனா பாதிப்பால் நேற்று குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் தலா 2 பேர் என 4 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 3ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,831 ஆக உயர்ந்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...