மாவனெல்ல கனேகொட பிரதேசத்தில் இன்று (07) தனியார் பேருந்தும் லங்கம பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லங்கம பஸ் ஒன்றும் இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.