உள்ளூராட்சி தேர்தல் இல்லை; இனி ஜனாதிபதித் தேர்தல் தான்: சிசிர

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என்றும், ஜனாதிபதித் தேர்தல் நவம்பரில் நடத்தப்படும் எனவும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று இடம்பெற்ற சுவதாரணி தீபா மருத்துவ சிகிச்சை தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் விரும்பவில்லை. ஜனநாயக நாட்டில் தேர்தலை ஒத்திவைப்பது ஏற்புடையதல்ல.

கூடிய விரைவில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவோம். இருப்பினும் ஏப்ரல் 25-ம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடைபெறும், என்றார்.

நாடு முழுவதும் சுமார் 8,000 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர், இது நாட்டுக்கு சுமை. ஆணைக்குழு நியமிக்கப்பட்டு உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறிக்கை கிடைத்தவுடன் தொடர தயார்” இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...