கிராம அளவில் எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்!

Date:

கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கனிம எண்ணெய் பிரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால், மின்சாரக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிப்பு, எரிபொருள் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் ஜனவரி முதல் இந்த வருடம் ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் எரிபொருள் விற்பனை 30 முதல் 70 வீதத்திற்கு இடையில் குறைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில், மண்ணெண்ணெய் விற்பனை 70 சதவீதம் குறைந்துள்ளது. லங்கா ஒட்டோ டீசல் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. பெட்ரோல் விற்பனையும் 30 சதவீதம் குறைந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...