சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் மீடியா போரத்தினால் விசேட கருத்தரங்கு ஞாயிறன்று!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘கிழக்கு, மற்றும்  மேற்குப் மாகாண  பெண்களின் உரிமைகளின் மதிப்புகள்’ என்ற தொனிப்பொருளில் விசேட கருத்தரங்கொன்று எதிர்வரும் 12 அன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு 24 ஹோர்டன் பிளேஸில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் லைட்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3.30 முதல் மாலை 6.30 வரை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், சிறப்பு பேச்சாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்  ஃபரீனா ருஸைக், சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தெஹ்ரான், ஈரான் பெண்கள் மற்றும் குடும்ப ஆய்வுகளில் கலாநிதி பட்டம் பெற்ற Zahirah mirjafari, கலாநிதி மரீனா தாஹா ரெஃபை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், saturday express  தலைமை ஆசிரியர், ஹனா இப்ராஹிம் அவர்கள் இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தவுள்ளார்.

இந்நிகழ்வில் நீங்களும் பங்கேற்க விரும்பினால் முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என்.எம். அமீன், 077 261 2288, அவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...