தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி செய்த எம்.எம். சுஹைருக்கு கௌரவம்!

Date:

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர்  50 வருடங்களை பூர்த்தி செய்தமைக்காக சட்டத்தரணிகள் சங்கத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட “அபிநந்தன விருது விழா” நேற்றிரவு  கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இங்கு கௌரவிக்கப்பட்டதுடன்  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதிக்கு “அபிநந்தன விருது” வழங்கினார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான “இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய வருடாந்த மாநாடு – 2023″இற்கு இணைந்த வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 03 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

ஜூலியானா மார்கரெட் கொஸ்வத்த, வோல்டர் லெஸ்லி டி சில்வா, இரத்னசபாபதி ஆறுமுகம் ஜெகதீசன்,  ஜனாதிபதி சட்டத்தரணி உபாலி ஏ. குணரத்ன, கனகரத்னம் கணேஸயோகன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், நீதியரசர் அசோக நிஹால் டி சில்வா, நீதியரசர் டி.ஜே.த.எஸ். பாலபடபெந்தி, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன உட்பட 26 சட்டத்தரணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், “அபிநந்தன” குழுவின் தலைவர் ஜனப்ரித் பெர்னாண்டோ, இணைப்பாளர் சமத் பெர்னாண்டோ, உள்ளிட்ட பிரதம அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...