இலங்கை பௌத்த மத சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு வாய்ப்பு!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) உமர் பாரூக் புர்கி அவர்கள் கொழும்பு கங்காராமய விகாரையின் வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானில் உள்ள பௌத்த பாரம்பரியம் மற்றும் அப்பகுதிகளுக்கு புனித யாத்திரை செல்வதை ஊக்குவிக்கும் வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், இலங்கை பௌத்த மத சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக, உயர்ஸ்தானிகர் தலைமையில் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

உலர் உணவுப் பொதிகள் விநியோகத்தின் மூலம் எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளை வணக்கத்திற்குரிய தேரர் பாராட்டினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...