நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர் .
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் நேற்று கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதுடன், கொழும்பில் பல வீதிகளுக்குள் நுழைய விடாமல் தடுத்ததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஒன்று கூடியிருந்தனர்.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
இந் நிலையில் சிலர் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்ததையடுத்து பல்கலைக்கழகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர்.