மஹிந்தவுக்கு வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம்  (10 நாட்களுக்கு) தற்காலிகமாக நீக்கியுள்ளது.

2023 ஏப்ரல் 20 முதல் 30 வரை வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதாக இன்று (8) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தனது கட்சிக்காரர் தென்கொரியாவிற்குச் செல்ல வேண்டியிருப்பதால், வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கையை கருத்தில் கொண்ட கோட்டை நீதவான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளார்.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...