பாகிஸ்தானின் IMF கடன் வசதி மேலும் தாமதமானது: கலக்கம் அடைந்துள்ள அரசு

Date:

பாகிஸ்தான் எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி மேலும் தாமதமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில தொழில்நுட்ப காரணங்களால் பாகிஸ்தான் கோரிய கடன் வசதி தாமதமாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் தற்போதுள்ள சிக்கல்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் ஒப்புதலையும் பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் தற்போது பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழ்நிலைகளில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை விரைவான கடன் தவணையாக பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.

கடந்த நவம்பரில் பெறப்பட இருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக அது தடைப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் கோரும் மொத்த கடன் நிவாரணம் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...