பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு!

Date:

2023ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 16ஆம் திகதி வரை முதல் பாடசாலை தேர்வுகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை காரணமாக 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை விடுமுறை ஒக்டோபர் 14 முதல், நவம்பர் 12 ஆம் திகதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாடசாலை மூன்றாம் தவணை டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி 1 வரை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
க.பொ.த சாதாரண தரத்திற்கு மே 13 மற்றும் 24 ஆம் திகதிக்கு இடையில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றுமொரு பாடசாலை விடுமுறை வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்கள் அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பிரிவேனா அதிபர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...