புதிய மருந்து தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன: சுகாதார அமைச்சர்

Date:

2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் மருந்து உற்பத்தியை 50 சதவீதமாக உயர்த்த முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தனியார் துறையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனர்களில் ஒன்றான “நவலோக மெடிகேர் (தனியார்) நிறுவனம்” என்ற பெயரில் நீர்கொழும்பில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனை கட்டிடத்தை சிகிச்சை சேவைகளுக்காக அண்மையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனை அடைவதற்காக 12 புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக சுமார் 200 மில்லியன் டொலர்கள் முதலீடுகள் வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இந்த நாட்டில் மருந்து உற்பத்தி 14 வீதத்திற்கும் 15 வீதத்திற்கும் இடையில் உள்ளதாகவும், அதனை அதிகரிப்பது இலகுவான விடயம் அல்ல எனவும், ஆனால் அந்த சவாலை எதிர்கொள்ளும் திறன் அமைச்சுக்கு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறையில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது அதிக முதலீடாக இருக்க வேண்டும் எனவும் அவ்வாறான முதலீடு இலாபகரமானதாக அமையாது என எதிர்பார்க்கப்பட்டாலும் சவால்களை சமாளிப்பது இலகுவானதல்ல எனவும் சுகாதார அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் மருந்து உற்பத்திக்கு தேவையான 30 முதல் 35 வீதமான மூலப்பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் இருப்பதாகவும், அதனை சமாளிக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...