மத்திய கிழக்குக்கான விமானப்பயணங்களின் போது இப்தார் வழங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

Date:

இந்த ஆண்டு ரமழானின் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ், பல மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து  பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்தார் விருந்துகளை தனது விமானங்களில் வழங்குகின்றது.

குவைத், பஹ்ரைன், ரியாத் மற்றும் டுபாய் உட்பட லண்டனுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல்வேறு வழிகளில், நோன்பு இடைவேளையின் போது பறக்கும் வாடிக்கையாளர்களுக்கு அரபு பேரீச்சம்பழம் மற்றும் பால் ஆகியவற்றை வழங்குகின்றது.

மேலும், ரமழான் நிறைவைக் குறிக்கும் வகையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது அனைத்து விமானங்களிலும் ஈத் பண்டிகையை கொண்டாடும்.

ஈத் அன்று விமானங்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை மதிய உணவு அல்லது இரவு உணவு வழங்கப்படும்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் பிராந்திய வர்த்தக மேலாளர் பனாஜியோடிஸ் தியோடோடோ, கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களில் பலருக்கு ரமழான் ஆண்டின் மிக முக்கியமான நேரம் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த நேரத்தில் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு ஆதரவாக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு லண்டனுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களில் இப்தார் வழங்குகிறோம்.

விமானத்தில் பயணிக்கும் போது கூட எங்கள் வாடிக்கையாளர்கள் நோன்பு துறக்க இது உதவும் என நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...