முன்னாள் சபாநாயகருக்கு பாராளுமன்றத்தில் நாளை அஞ்சலி!

Date:

இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேராவின் பூதவுடல் நாளை (30) காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்றத்திற்கு முன்பாக உள்ள விசேட சம்பிரதாய மண்டபத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

ஜோசப் மைக்கேல் பெரேரா இலங்கை பாராளுமன்றத்தின் 17வது சபாநாயகராவார். 2001 முதல் 2004 வரை சபாநாயகராக பணியாற்றினார்.

பல அரசாங்கங்களில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் மற்றும் தொழிலாளர் உட்பட அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகித்த பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...