முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் 40ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அவர் கல்முனை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதிக்கொண்ட விபத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்தையடுத்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான இவர் 2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவானார்.

எனினும் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார். அதேநேரம் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியடைந்தார்.

Popular

More like this
Related

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...