வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது!

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து ஸ்ரீ ரங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த உதவி காவல்துறை உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக காவல்துறை முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஸ்ரீ ரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் காவல்துறை உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...